Saturday, July 11, 2015


                                         அமைதியும் அழுகையும்

அழுகை என்பது இயலாமையின் மறுவடிவம். தன்னால் முடியவில்லையே என்றுதான் மனிதன் அழுகிறான். மனிதன் அவனை மட்டுமே முன் நிறுத்துவான். உதாரணம்: ஒருவர் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடும் போது டாக்டர், “இறைவனால் மட்டுமே இவரை காப்பாற்ற முடிய்ம்” என்று உறவினர்களிடம் கூறும் போது, “இல்லை டாக்டர் உங்களால் மட்டும்தான் முடியும். எப்படியேனும் காப்பாற்றுங்கள்” என்று இறைவனையே நிராகரிப்பார்கள். அழும் போது உள்ளே இருக்கும் அழுக்குகள் {பொறாமை, சுயநலம், பேராசை, ஒழுங்கின்மை, குறைகூறல்} போன்றவை மறைவதால் மனம் அமைதி பெறுகிறது. அமைதியில் ஆண்டவன் செயல்படுகிறார். அங்கே மனிதன் இல்லை.

Thursday, September 25, 2008

ஸ்ரீஅன்னை- பகவான் ஸ்ரீஅரவிந்தர்

ஸ்ரீஅன்னை, பகவான் ஸ்ரீ அரவிந்தர் மானிட குலத்தை திருவுருமாற்றம் செய்யவும், சத்தியஜீவியத்தை உலகிற்குக்கொண்டு வரவும் உலகிற்கு வந்தவர்கள். அவர்களின் கோட்பாடுகளை வாழ்வில் கடைபிடித்தால் வாழ்வு சொர்க்கமாக மாறும் என்பதை 'மதர் சர்வீஸ் சொஸைடி' நிருபித்துவருகிறது. அதை தமிழகத்தில் பலர் கடைப்பிடித்து பயனடைந்து வருகின்றனர்.
சத்திய ஜீவியத்தில் அனைத்தும் ஒன்று.
அதில் ஜீவனும் ஜீவியமும் ஒன்று.
ஜீவியமும் ஜீவனும் ஒன்றே.
எண்ணம் ஒரு கதிர்.
அது ஜீவனின் கதிருமாகும்.
அதிலும் அது செறிந்துள்ளது.
அது முதல் வெளிப்பாடு.
அது படைப்பின் சுயஞானமாக வெளிப்படுகிறது.
அது வேறிடத்தில் வித்தாக இருக்கிறது.
சிருஷ்டிக்கு முந்தைய சுயதெளிவில் அது இருந்திருக்கிறது.
அது எண்ணமாக வெளிவருகிறது.
எண்ணம் சத்தியம்.
சத்தியம் பரிணமிக்கிறது.
தன் சொந்த சக்தியாலும் ஜீவியத்தாலும் அது பரிணமிக்கிறது.
எப்பொழுதும் அது தன்னையறியும்.
எப்பொழுதும் அது தன்னை அபிவிருத்தி செய்யும்.
எண்ணத்திலுள்ள சக்தியால் அதைச் செய்கிறது.
அது தன்னையே சிந்திக்கக்கூடியது.
ஒவ்வொரு சலனத்தாலும் பெற்ற ஞானத்தால் அதைச் செய்கிறது.
இதுவே சிருஷ்டியின் இரகசியம், பரிணாம இரகசியம்.
பரம்பொருள் 111-பக்கம் - 304 - 305.
THE LIFE DIVINE - PAGE - 129 - PARA-15.
நன்றி! பகவான் ஸ்ரீ கர்மயோகி.